பீகாரில் ரயிலை நடுவழியில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் தேநீர் வாங்கி அருந்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
பாட்னாவை அடுத்த சிவான் ரயில் நிலையம் அருகே லெவல் கிராசிங் மூடப்பட்டிருந்ததால் Gwalior-Barauni எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான உதவி ஓட்டுநர், அருகே உள்ள ஒரு கடைக்கு சென்று தேநீர் வாங்கி வந்து கொடுக்க, ரயில் ஓட்டுநர் அதனை வாங்கி அருந்தியுள்ளார்.
இதனை பார்த்து கடுப்பான ரயில் பயணிகளும், லெவல் கிராஸிங்கில் காத்திருந்த வாகன ஓட்டிகளும் அதனை தங்கள் செல்போன்களில் படம் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசியில் உள்ள கோட்ட ரயில்வே மேலாளர் விசாரணை மேற்கொண்டு வருவதாக சிவன் ஸ்டேஷன் மாஸ்டர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முடிந்ததும் ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை பெஸ்ட் ஆக மாற்றி விட்டு தான் அடுத்த முறை மக்களை சந்திக்க வருவோம்.. அமித்ஷா சூளுரை
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, விரைவு ரயில் அதிகாலை 5.27 மணிக்கு சிவான் நிலையத்தை அடைந்தது. அங்கு லெவல் கிராசிங் மூடப்பட்டிருந்ததால், உதவி ஓட்டுனர் இன்ஜினில் இருந்து இறங்கி சென்று தேநீர் வாங்கி வர கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
இதனிடையே, கிராசிங்கில் கிரீன் சிக்னல் கிடைத்தவுடன் ஹாஜிபூர் நோக்கி பயணிக்க அதிகாலை 5.30 மணியளவில் சிவான் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டது. இன்ஜின் கேபினுக்குள் தனது உதவியாளர் இல்லை என்பது ஓட்டுனருக்கு நன்றாகவே தெரியும். எனினும், அவர் வண்டியை இயக்கினார்.
தொடர்ந்து, உதவி ஓட்டுனர் கையில் டீ கோப்பையுடன் காத்திருந்த டீ ஸ்டால் அருகே ரயில் சென்றபோது, ஓட்டுனர் வேண்டுமென்றே ரயிலை நிறுத்தினார்,” என்று அவர்கள் கூறினர்.
தகவல்களின்படி, ரயில் தேவையில்லாமல் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், ரயில்வே கேட்டின் இருபுறமும் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இதில், நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸூம் சிக்கிக் கொண்டது என்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.