முகப்பு /செய்தி /இந்தியா / லாரி ஏறியதில் உயிருக்கு போராடிய இளைஞர்.. டிரைவர் செய்த கொடூர செயலால் 9 மணி நேரமாக சாலையில் கிடந்த சடலம்

லாரி ஏறியதில் உயிருக்கு போராடிய இளைஞர்.. டிரைவர் செய்த கொடூர செயலால் 9 மணி நேரமாக சாலையில் கிடந்த சடலம்

விபத்தில் உயிரிழந்த இளைஞர்

விபத்தில் உயிரிழந்த இளைஞர்

Crime News : கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் லாரி ஏறி இறங்கி உயிரிழந்த இளைஞரின் உடல் 9 மணி நேரம் சாலையில் கிடந்த அதிர்ச்சி சம்பவம். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

தமிழகத்தில் இருந்து வாழை மரங்களை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு வந்த லாரி வாழை விதைகளை இறக்கிய பின் மீண்டும் தமிழகத்திற்கு புறப்பட்டது. அப்போது கொட்டாரக்கரை அடுத்த சதானந்தபுரம் அருகே நேற்று இரவு 11.30 மணியளவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரமாக சென்றது. இதனால் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரதீஷ் என்ற இளைஞர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தார். பின்னர் லாரி சிறிது தூரம் சென்ற பிறகு சந்தேகமடைந்த லாரி டிரைவர் திரும்பி வந்தார்.

அப்போது, படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ரதீஷை பார்த்த லாரி ஓட்டுநர் அவரை சாலையின்  ஓரமாக இழுத்து மாற்றினார். பிறகு டிரைவர் லாரியுடன் அங்கிருந்து தப்பினார். இந்நிலையில், காலை 8 மணியளவில் அவ்வழியாக சென்ற அப்பகுதி மக்கள் இளைஞர் ரதீஷின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரவு நேரத்தில் அருகில் உள்ள கடைகளுக்கு வந்த லாரிகள் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணகுமார் தான் இந்த கொடூர செயலுக்கு பின்னணியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், புத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த லாரி டிரைவர் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். டிரைவரின் மனிதாபிமானமற்ற செயலால் ரத்தீஷின் மரணம் நடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Crime News, India, Local News