• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோவா கடற்கரையில் இனி மது குடிக்க முடியாது... மீறினால் அபராதம்

கோவா கடற்கரையில் இனி மது குடிக்க முடியாது... மீறினால் அபராதம்

கோவா

கோவா

தனி நபராக இருந்தால் ரூ.2000 மற்றும் குழுவாக இருந்தால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும்

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவாவில் கடற்கரை, பொது இடங்களில் மது அருந்துதல், உணவு சமைத்தல் உள்ளிட்டவைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா தாக்கலானது.

    இந்தியாவின் மிகவும் பிரபலமான் சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கிய ஒன்றாக கருதப்படுவது கோவா.கோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை தருகின்றனர்.

    கோவாவில் உள்ள கடற்கரையிலும், பொது இடங்களிலும் சிலர் மது அருந்தியும் சிலர் சமையல் செய்தும் அசுத்தம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் மது குடித்துவிட்டி பாட்டில்களை உடைத்தும் சுற்றுலாப் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்வதாகவும் புகார்கள் அதிகளவில் வருகின்றன.

    இதை தடுக்கும் வகையில் சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும் அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்ததாகவும் ஜனவரி 24-ம் தேதி அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அஜ்கான்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மசோதா நேற்று கோவா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து கோவாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்கள், கடற்கரையில் மது அருந்தினாலோ, உணவு சமைத்தாலோ அபராதம் விதிக்கப்படும். தனி நபராக இருந்தால் ரூ.2000 மற்றும் குழுவாக இருந்தால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை கட்டத் தவறினால் 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: