டெல்லி பிரம்மாண்ட கொரோனா மருத்துவமனையில் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் பெயர்களில் வார்டுகள்

டெல்லி பிரம்மாண்ட கொரோனா மருத்துவமனையில் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் பெயர்களில் வார்டுகள்
மாதிரி படம் (Reuters)
  • Share this:
கொரோனா சிகிச்சைக்காக பத்தாயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய பிரமாண்ட மருத்துவமனையை, DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு 12 நாட்களில் உருவாக்கியுள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரமாண்ட மருத்துவமனையை DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ளது.

250 ஐசியூ படுக்கை வசதிகள் உள்ளிட்ட பத்தாயிரம் படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை 12 நாட்களில் தயாராகியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு முழுமையாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


டெல்லி விமான நிலையத்துக்கு அருகே உள்ள விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, ஆயுதப்படையினருக்கான மருத்துவப் பிரிவால் இயக்கப்பட உள்ளது.

இந்த மருத்துவமனை முழுவதுமாக குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு சர்தார் வல்லபாய் படேல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐசியூ மற்றும் வெண்டிலேட்டர் வார்டுக்கு கல்வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.Also read... சளியினால் கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகுமா?

இதேபோல் கல்வானில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி உள்ளிட்ட 20 வீரர்களின் பெயர்களும், ஒவ்வொரு வார்டுக்கும் சூட்டப்பட்டுள்ளன. இங்கு கொரோனா சிகிச்சை முழுமையாக இலவசமாக வழங்கப்படும் என DRDO தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 600 பேர் பணியில் ஈடுபட உள்ளதாகவும், வரும் நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து இது மாறுபடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மருத்துவமனையை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் DRDO தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading