Home /News /national /

திரௌபதி முர்மு: பாஜக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிப்பு

திரௌபதி முர்மு: பாஜக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிப்பு

பாஜக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு

பாஜக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு

Draupadi Murmu: ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னர், திரௌபதி முர்மு தனது அரசியல் வாழ்க்கையை கவுன்சிலராகத் தொடங்கினார்.

    ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (Draupadi Murmu) குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணயின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எதிராக ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினரான முர்மு போட்டியிடுகிறார். 64 வயதான இவர், தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் முதல் பழங்குடியினப் பெண் ஆவார்.

    ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னர், திரௌபதி முர்மு தனது அரசியல் வாழ்க்கையை கவுன்சிலராகத் தொடங்கினார், பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக ஆனார். ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக சட்டமன்ற உறுப்பினராக இவர் இருந்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: BJP, Draupadi Murmu, President Election

    அடுத்த செய்தி