• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வரதட்சனைக்காக பாம்பை ஏவி மனைவி கொலை: கணவர் குற்றவாளி!

வரதட்சனைக்காக பாம்பை ஏவி மனைவி கொலை: கணவர் குற்றவாளி!

உத்ரா கொலைவழக்கு

உத்ரா கொலைவழக்கு

க்டந்த அண்டு மே 7ம் தேதி தனது தாயாரின் வீட்டில் உத்ரா பாம்பு கடித்து உயிரிழந்தார். ஏற்கனவே ஒருமுறை படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த அவரை பாம்பு கடித்துள்ளது. மீண்டும் பாம்பு கடித்து அவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

  • Share this:
    கேரளாவில் வரதட்சனைக்காக தனது மனைவி உத்ராவை  பாம்பு மூலம் கணவன்  சூரஜ் கடிக்க வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில்  கேரள நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், சூரஜ் குற்றவாளி என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவருக்கான தண்டனை நாளை மறுநாள் (அக்டோபர் 13) அறிவிக்கப்படவுள்ளது.

    கேரளாவை நிகழ்ந்த உத்ரா படுகொலை சம்பவம் நாட்டையே உலுங்கியது. வரதட்சணை விவகாரம் இந்த கொலைக்கு பின்புலமாக கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுமார் 1000 பக்கம் குற்றப் பத்திரிக்கை  நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று  கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சூரஜ் குற்றவாளி என நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம் அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை மறுநாள் (அக்டோபர் 13) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

    வழக்கின் பின்னணி

    கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உத்ராவுக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018 இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.  வங்கி அதிகாரியான  சூரஜ் பத்தனம்திட்டா அரூர் பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்துவந்தார்.

    இந்நிலையில், கடந்த அண்டு மே 7ம் தேதி தனது தாயாரின் வீட்டில் உத்ரா பாம்பு கடித்து உயிரிழந்தார். ஏற்கனவே ஒருமுறை படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த அவரை பாம்பு கடித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் அவர் குணமடைந்தார்.

    இதையும் படிங்க: யார் மீதும் காரை மோதி நசுக்க நாம் அரசியலுக்கு வரவில்லை: மத்திய அமைச்சர் மகனை விமர்சித்த உ.பி. பாஜக தலைவர்


    மீண்டும் பாம்பு கடித்து அவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2வது மாடியில் உள்ள அந்த அறையில் ஏ.சி. உள்ளதால் ஜன்னலை திறக்கக்கூட வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது விஷப் பாம்பு எப்படி வந்தது என போலீசார் குழம்பி போனார்கள். தூக்கத்தில் இருந்து எப்போதுமே தாமதமாக எழுந்திரிக்கும் சூரஜ், மனைவியை பாம்பு கடித்த தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து அறையை விட்டு சென்றதால் போலீசாரின் சந்தேகம் அவர் பக்கம் திரும்பியது.

    வரதட்சணைக்காக கொலை:

    போலீசாரின் விசாரணையில் வரதட்சணைக்காகதான் உத்ராவை கொன்றுவிட்டதாக சூரஜ் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே ஒருமுறை பாம்பை ஏவி கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பிய நிலையில், இந்த முறை தூக்க மாத்திரை கொடுத்து படுக்க வைத்து பின்னர் பாம்பு மூலம் அவரை கடிக்க வைத்து கொன்றுள்ளார்.

    மேலும் படிக்க: காஷ்மீரில் தீவிரவாத அனுதாபிகள் 900 பேர் கைது: சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தொடர்ந்து அரசு அதிரடி!


    திருமணத்தின்போது 10 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 சவரன் நகை,  சொத்து, கார்  போன்றவற்றை வரதட்சணையாக சூரஜ் பெற்றுள்ளார். உத்ரா குடும்பத்திடம் இருந்து மேலும் வரதட்சணை பெற அவர் முயன்றுள்ளார். இது பலன் அளிக்காமல் போகவே உத்ராவை பாம்பு மூலம் கடிக்க வைத்து கொன்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: