முகப்பு /செய்தி /இந்தியா / செல்போன் கோபுரங்கள் நிறுவுவதில் மோசடி.. பொதுமக்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை!

செல்போன் கோபுரங்கள் நிறுவுவதில் மோசடி.. பொதுமக்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை!

பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு எச்சரிக்கை

பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு எச்சரிக்கை

செல்போன் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களை மத்திய தொலைத்தொடர்பு துறை விளக்கியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

செல்போன் கோபுரங்களை நிறுவுவது தொடர்பான மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

செல்போன் கோபுரங்கள் நிறுவுதல் என்ற பெயரில் சில நேர்மையற்ற நிறுவனங்கள்/ ஏஜென்சிகள்/தனிநபர்கள் பொதுமக்களிடம் அதிகளவில் மாத வாடகை வழங்கப்படும் போன்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கவனத்திற்கு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோன்று, கீழ்க்கண்டவற்றை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அந்த துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் விவரம்:

செல்ஃபோன் கோபுரங்களை நிறுவுவதற்கு வளாகத்தை குத்தகைக்கு/ வாடகைக்கு விடுவதில் DoT தொலைத் தொடர்புத்துறை / TRAI நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதில்லை. DoT/ TRAI அல்லது அதன் அதிகாரிகள் மொபைல் டவர்களை நிறுவுவதற்கு "ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை" வழங்குவதில்லை. செல்ஃபோன் கோபுரங்களை நிறுவுவதற்கு ஏதேனும் நிறுவனம்/ஏஜென்சி/தனிநபர் பணம் கேட்டால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்கவும், நிறுவனத்தின் நற்சான்றிதழ்களை சரிபார்க்கவும். இதுபோன்ற மோசடிச் செயலை யாரேனும் கண்டால், அவர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து புகாரளிக்கலாம்.

இதையும் படிங்க: கோவிட் பாதிப்பு நிலவரம் - ஜூலை மாதம் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரிப்பு

மேலும் கூடுதலாக, DoT இன் உள்ளூர் கள அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம், அவர்களின் தொடர்பு விவரங்கள் DoT இணையதளத்தில் https://dot.gov.in/relatedlinks/director-general-telecom இல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Fraud, Mobile phone, Telecom