வரும் மே 3ஆம் தேதிக்குள் மசூதிகளில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால், பதிலுக்கு நாங்களும் ஒலி பெருக்கி பயன்படுத்துவோம் என மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்ரே நாட்டில் மத மோதல் நடைபெறுவதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். புனேவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜ் தாக்ரே, மசூதிகளில் ஒலி பெருக்கி பயன்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை குறித்து பேசினார்.
ராஜ் தாக்ரே பேசுகையில், "மகாராஷ்டிராவில் கவலரம் ஏற்படுவதை தான் விரும்புவதில்லை. மக்கள் வழிபடும் உரிமையில் யாரும் தலையிட மாட்டார்கள். அதேவேளை, நீங்கள் ஒலிபெருக்கிகளை தொடர்ந்து பயன்படுத்தினால் நாங்களும் அதை பயன்படுத்துவோம். சட்டத்தை விட மதம் பெரியது அல்ல என்பதை இஸ்லாமியர்கள் உணர வேண்டும்.
இதையும் படிங்க: அசாமில் கடும் மழை வெள்ளம் - 20,000 பேர் பாதிப்பு, 8 பேர் உயிரிழப்பு
இது போன்ற விவகாரங்களை, இப்படி தான் கையாள வேண்டும். அவர் அவருக்கு புரியும் மொழியில் தான் பதில் கூற வேண்டும். மே 3ஆம் தேதிக்குப் பின் செய்ய வேண்டியதை செய்வோம்" என்றார்.
மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தவதை மே 3ஆம் தேதிக்குள் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பதிலுக்கு மசூதிகளின் வாசல்களில் அனுமான் சாலிசா பாடலை ஒலிபெருக்கியில் ஒலிபரப்புவோம் என ராஜ் தாக்ரே பகிரங்க எச்சரிக்கை தெரிவித்தார்.
இதற்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜ் தாக்ரே ஒரு புதிய இந்து ஒவைசி எனவும், ஒவைசியின் எம்ஐஎம் கட்சி போல ராஜ் தாக்ரே கட்சி செயல்படுகிறது என சாடினார். இதற்கு பின்னணியில் பாஜக உள்ளதாகவும், மகாராஷ்டிராவில் மதக் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக சஞ்சய் ராவத் புகார் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை எனவும், முதுகெலும்பு இல்லாதவர்களின் பேச்சை தான் பொருள்படுத்தவில்லை எனவும் கூறினார். வரும் ஜூன் 5ஆம் தேதி தனது தொண்டர்களுடன் அயோத்தி சென்று வழிபட உள்ளதாக கூறிய ராஜ் தாக்ரே, மே 1ஆம் தேதி சாம்பாஜி நகரில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா ஊர்வலத்தில் மோதல் வெடித்து பலர் காயமடைந்துள்ளனர். குற்றச் செயலில் ஈடுபட்ட பலரை காவல்துறை கைது செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharashtra, Mosque