Remdesivir: குழந்தைகளுக்கு ரெமிடெசிவர், ஸ்டீராய்டு மாத்திரைகள் வேண்டாம் - புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

கோப்புப் படம்

மிதமான பாதிப்பு மற்றும் சாதாரண பாதிப்பு இருந்த குழந்தைகள் கொரோனா வைரஸில் இருந்து மீண்டபிறகு பக்கவிளைகளால் பாதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

  • Share this:
18 வயதுக்குட்பட்டவர்களுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, ரெமிடெசிவர் பயன்படுத்த வேண்டாம் என்றும், சி.டி ஸ்கேன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளுக்கு பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கியிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக பரவல் விகிதம் மெல்ல கட்டுக்குள் வந்திருக்கிறது. அடுத்த அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படும் நிலையில், இது குறித்து தேசிய கொரோனா தடுப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது. 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதற்கான எந்த சான்றுகளும் இல்லை எனவும், இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், பெரும்பாலானோருக்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாக கூறியுள்ளார். மிதமான பாதிப்பு மற்றும் சாதாரண பாதிப்பு இருந்த குழந்தைகள் கொரோனா வைரஸில் இருந்து மீண்டபிறகு பக்கவிளைகளால் பாதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், ரெமிடெசிவர், ஸ்டீராய்டு மருந்து பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

லேசான தொற்று

ஸ்டீராய்டு மாத்திரைகள் குழந்தைகளுக்கு ஆபத்தானது என்பதால், லேசான அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு அதனை பரிந்துரைக்கக்கூடாது. ஹெச்.ஆர்.சி.டி ஸ்கேனுக்கு பரிந்துரைக்கலாம். லேசான தொற்று உள்ளவர்களுக்கு பாராசிட்டமால் 10-15mg பவர் டோஸ், நான்கு முதல் 6 மணி நேர இடைவெளியில் கொடுக்கலாம். இருமல் இருக்கும் குழந்தைகள் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க அறிவுறுத்தலாம்.

Also read... Mask for Kids : என் குழந்தை மாஸ்க் அணியவில்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்குமா..? பெற்றோர்களுக்கான சில தகவல்கள்..!

மிதமான தொற்று

ஒருவேளை மிதமான அல்லது தொற்று தீவிரம் அடைவதை அறிந்தால் ஆக்சிஜன் தெரபி சிகிச்சை கொடுக்கலாம். மிதான தொற்று பாதிப்பில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கார்டிகோஸ்டீராய்டுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை

கடும் தொற்று

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும்போது சுவாசத்தை சீராக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சிகிச்சையை தொடர வேண்டும். பாக்டீரியா தொற்று குறித்து அறிகுறி அல்லது சந்தேகம் ஏற்பட்டால் ஆன்டிமைக்ரோபியல் சிகிச்சையை கொடுக்கலாம். உறுப்பு இழப்பு ஏற்படும் அபாயம் இருந்தால் அதற்கான முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும்.

மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் தேவையில்லை என்றும், 12 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாஸ்க் அணிய வேண்டும் எனக் கூறியுள்ளது. தேவைப்பட்டால் மட்டுமே ஸ்கேனுக்கு பரிந்துரைக்க வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் சி.டி ஸ்கேன் பரிந்துரைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: