காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம்: ராகுல் காந்தி

உத்தரப் பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரஸ் முயற்சி செய்து வந்தது. இரு கட்சிகளும் காங்கிரஸை தங்களது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.

news18
Updated: January 9, 2019, 3:08 PM IST
காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம்: ராகுல் காந்தி
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
news18
Updated: January 9, 2019, 3:08 PM IST
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை குறைவாக மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

2019-ம் மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் மெகா கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரஸ் முயற்சி செய்து வந்தது. ஆனால் பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் தங்களுக்குள் கூட்டணி அமைத்து தலா 37 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இரு கட்சிகளும் காங்கிரஸை தங்களது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், துபாயை சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம். பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி குறித்து செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். இருப்பினும், அவர்களுடன் கூட்டணி அமைத்து மோடியை தோற்கடிப்பதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்’ என்றார்.

மேலும், ‘உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை குறைத்து மதிப்பிடுவது தவறான விஷயம். பிரதமர் மோடியை தோற்கடிப்பதுதான் எங்களுடைய முதல் இலக்கு. எந்தெந்த மாநிலங்களில் காங்கிரஸ் வலிமையாக இருக்கிறதோ, அங்கே நேரடியாக பா.ஜ.க.வுடன் மோதுவோம். மற்ற மாநிலங்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்’ என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Also see:

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...