ஹோம் /நியூஸ் /இந்தியா /

'அப்பா அம்மாகிட்ட சொல்ல வேணாம் பிளீஸ்'.. கேன்சர் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி கோரிக்கை - மருத்துவர் உருக்கமான பதிவு

'அப்பா அம்மாகிட்ட சொல்ல வேணாம் பிளீஸ்'.. கேன்சர் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி கோரிக்கை - மருத்துவர் உருக்கமான பதிவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தன்னிடம் சிகிச்சை பெற்ற 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சியான கதையை ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வருபவர் டாக்டர் சுதீர் குமார். இவரிடம் 10 மாதங்களுக்கு முன்பு ஒரு இளம் தம்பதி தனது 9 வயது மகனின் சிகிச்சைக்காக அணுகியுள்ளார். அந்த சிறுவனின் பெயர் மனு.

அச்சிறுவனுக்கு glioblastoma multiforme என்ற அரிய வகை மூளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கீமோதெரப்பி சிகிச்சையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவர் சுதீரிடம் தனது மகனுக்கு நோய்யின் தன்மையை எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். தங்களால் இது பற்றி அவனிடம் பேச முடியவில்லை என்றுள்ளனர்.

பெற்றோரின் கோரிக்கையை ஏற்ற மருத்துவர் சுதிர் சிறுவனிடம் உனக்கு இந்த நோய் உள்ளது, இவ்வாறு எல்லாம் சிகிச்சை தருவோம் என்று தெரிவித்துள்ளார். அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்ட சிறுவன், மருத்துவரிடம் தனியாக ஒரு விஷயத்தை கூற வேண்டும் என்றுள்ளான். சிறுவனின் கோரிக்கையை ஏற்று பெற்றோரை வெளியே அனுப்பி மருத்துவர் சுதிர் சிறுவனிடம் தனியாக பேசியுள்ளார். அப்போது அந்த சிறுவன், தனது மருத்துவ அறிக்கையை எல்லாம் வைத்து என்ன பாதிப்பு என்று ஐபேட் மூலம் இணையத்தில் விவரங்களை பார்த்தேன். அதில் என்னால் 6 மாதம் தான் உயிரோடு இருக்க முடியும் என்ற விவரதத்தை தெரிந்து கொண்டேன். ஆனால், இதை எனது பெற்றோரிடம் கூற வேண்டாம். அவர்கள் என் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளார்கள். ப்ளீஸ் சொல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளான். சிறுவனின் இந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பார்க்காத மருத்துவர் சில நொடிகள் திகைப்படைந்தார். நான் பார்த்துக்கொள்கிறேன் கவலை வேண்டாம் என்றுள்ளார். பின்னர் அவரின் பெற்றோரை சந்தித்து சிறுவன் மனு பேசியதை கூறியுள்ளார்.

மகனின் வார்த்தைகளை கேட்டு கண்ணீர் விட்டு அழுத பெற்றோர், அவன் உயிரோடு இருக்கும் காலத்திலாவது அவனுக்கு வேண்டிய சந்தோஷங்கள் அனைத்தையும் தர வேண்டும் என முடிவெடுத்தனர். தங்கள் வேலைகளுக்கு தற்காலிக விடுப்பெடுத்து அனைத்து நேரத்தையும் மகனுடன் மட்டுமே கழித்தனர். அவன் ஆசையை நிறைவேற்ற டிஸ்னிலான்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: 500 அடி உயரத்தில் குரங்குகளுடன் செல்ஃபி.. விபரீத ஆசையால் உயிரை பறிகொடுத்த ஆசிரியர்!

இந்நிலையில், அச்சிறுவன் ஒரு மாதத்திற்கு முன்பு காலமானான். சிறுவனின் மரணத்திற்கு பின்னர் ஒரு நாள் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மருத்துவர் சுதிரை பார்த்து வாழ்வின் சிறப்பான 8 மாதங்களை கொடுத்ததற்கு நன்றி கூறி சென்றுள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை மருத்துவர் சுதிர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

First published:

Tags: Cancer, Hyderabad, Viral News