• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு வாகனங்களை தடுக்கக்கூடாது : உள்துறை அமைச்சகம்

ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு வாகனங்களை தடுக்கக்கூடாது : உள்துறை அமைச்சகம்

மாதிரி படம்

மாதிரி படம்

ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு வாகனங்களை தடுக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

  • Share this:
    ஊரடங்கு கட்டுப்பாடு சரக்கு வாகனங்கள் மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு பொருந்தாது எனவும் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதற்கு தடை எதுவும் கிடையாது எனவும் விளக்கமளித்துள்ளது உள்துறை அமைச்சகம்.

    இது தொடர்பாக உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனுப்பியுள்ள கடிதத்தில், சில மாநிலங்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நெடுஞ்சாலைகளில் மக்கள் பயணிக்கவும், வாகன போக்குவரத்துக்கும் தடை விதித்து இருப்பதாக புகார்கள் கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்த கட்டுப்பாடு சரக்கு வாகனங்கள் மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு பொருந்தாது எனவும் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதற்கு தடை எதுவும் கிடையாது எனவும் விளக்கமளித்துள்ளது.

    இதேபோல் இரவில் ரயில், விமானங்களில் இருந்து இறங்கியவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு போய்ச் சேரவும் தடை இல்லை எனவும் உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

    மேலும் படிக்க...

    ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாதவர்களிடம் தாமதத்துக்கான அபராதக் கட்டணம் ரத்து: நிர்மலா சீதாராமன்

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: