மகாராஷ்டிர அரசியலில் அனில் தேஷ்முக் விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக அவர் சார்ந்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பிரபுல் படேல் இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷாவை சந்தித்ததாக ஒரு தகவல் வெளியானது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த ரகசிய சந்திப்பு நடந்ததாக குஜராஜ் ஊடகங்களில் செய்தி வெளியானது.
சந்திப்பு நடந்ததா இல்லையா என்பதை இருதரப்பும் இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தாக வெளியான தகவலை சிவசேனா எம்.பியும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் மறுத்துள்ளார்,
இதுகுறித்து பேசியவர், 'சரத் பவார், அமித் ஷா வதந்தி குறித்து இங்கு யாரும் புருவங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. சில விஷயங்களை அந்தந்த நேரத்திலேயே தெளிவுபடுத்திவிட வேண்டும். இல்லையெனில் அவை குழப்பத்தை ஏற்படுத்துவிடும். சரத் பவார், அமித் ஷா இடையே எவ்வித ரகசிய சந்திப்பும் அகமதாபாத் அல்லது வேறு எங்கும் நடைபெறவில்லை என மிகுந்த நம்பிக்கையுடன் கூறமுடியும். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இது எதையும் சாதிக்காது’ என்றார்.