"பப்ளிசிட்டி; சோசியல் மீடியாவிலிருந்து ஒதுங்கியிருங்கள்!": பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமித்ஷா அட்வைஸ்!

அமித்ஷா

போலீஸ் அகாடமியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, நீங்கள் செய்த பணிகள் விளம்பரத்திற்காக மட்டுமே செய்யப்பட்டனவா என்பதை நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் நாட்குறிப்பில் குறிப்பிடுவீர்கள் என்று சபதம் எடுக்க வேண்டும்.

  • Share this:
உள்துறை அமைச்சர் அமித்ஷா பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளிடம், சமூக ஊடகங்களைத் தவிர்க்கவும், விளம்பரத்தை தேடக்கூடாது என்றும் அறிவுறுத்தியதுடன், ஏழை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் நலன்கள் குறித்து உணர வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக் கொண்டார் என்று உள்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐபிஎஸ் பயிற்சியில் இருக்கும் 72வது பேட்ச் பிரிவு அதிகாரிகளிடையே காணொலி காட்சி வழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, “காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, மற்றும் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் காவல்துறை மீது உள்ளன. இந்த இரண்டிலும் காவல்துறையினர் ஈடுபடாமல் நடுத்தரமான நடவடிக்கையை மட்டும் எடுக்க வேண்டும். நடுத்தரமான நடவடிக்கை என்றால் சட்டவிதிகளின் வரம்புக்குள் காவல்துறையினர் செயல்பட வேண்டும்.

தகவல்தொடர்பு மற்றும் உணர்திறன் போன்றவை காவல்துறையினரின் இமேஜை மேம்படுத்துவதற்கு அவசியமானது, எனவே அனைத்து போலீசாரும் உணர்திறன் மற்றும் பொது தொடர்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் ஊரகப் பகுதிகள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அங்கு இரவில் தங்க வேண்டும்.

Also Read:  மைனர் சிறுமிகள் உட்பட மூவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான அவலம்: அதிரவைக்கும் உத்தரப்பிரதேசம்!

காவல் அதிகாரிகள், குறிப்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகள், பப்ளிசிட்டிக்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். விளம்பரம் தேடும் வேட்கை வேலைக்குத் தடையாக இருக்கிறது. தற்போதைய காலங்களில் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றாலும், காவல்துறை அதிகாரிகள் அதிலிருந்து விலகி தங்கள் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

போலீஸ் அகாடமியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, நீங்கள் செய்த பணிகள் விளம்பரத்திற்காக மட்டுமே செய்யப்பட்டனவா என்பதை நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் நாட்குறிப்பில் குறிப்பிடுவீர்கள் என்று சபதம் எடுக்க வேண்டும்.

விஞ்ஞான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விஞ்ஞான மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட விசாரணைகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மனிதவளத்தின் தேவை குறைவாக இருக்கும் என்று கூறினார்.

Also Read:   வயலின் பரிசாக கொடுத்த காவல்துறை ஆணையர்: இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்த முதியவர்!

கிடைக்கக்கூடிய மனிதவளத்தை சிறப்பாகவும் உகந்ததாகவும் பயன்படுத்தக் கூடிய வகையிலான திட்டத்தை போலீஸ் அதிகாரிகள் உருவாக்க வேண்டும்.

மேலும், காவல்துறையில் கான்ஸ்டபிள்கள் 85 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளனர் என்றும் இது போலீஸ் அமைப்பின் முக்கிய பகுதியாகும் என்றும் அமித்ஷா கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: