தேசத்திற்கு தேவை காவலாளிகளே... மகாராஜாக்கள் அல்ல- மோடி

தேசத்தை கொள்ளையடித்தவர்கள் ஒவ்வொரு பைசாவையும் திரும்ப செலுத்தியே தீர வேண்டும் என்று கூறினார்.

Web Desk | news18
Updated: April 1, 2019, 8:55 AM IST
தேசத்திற்கு தேவை காவலாளிகளே... மகாராஜாக்கள் அல்ல- மோடி
பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: April 1, 2019, 8:55 AM IST
தேசத்திற்கு தேவை காவலாளிகளே தவிர மகாராஜாக்கள் அல்ல. காவலாளியாக எனது கடமையைச் செய்கிறேன். குறுகிய மனப்பாங்குடையவர்களே என்னை விமர்சிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நானும் காவலாளியே என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நாடு முழுவதும் உள்ள 500 இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய பிரதமர், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளித்தார். பாலாக்கோட் விமானத் தாக்குதலை நடத்தியது ராணுவ வீரர்கள்தானே தவிர தாம் அல்ல என பிரதமர் கூறினார். தாக்குதல் நடந்த இடத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக சர்வதேச பிரதிநிதிகளை, பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை என்று பிரதமர் கூறினார்.

தாக்குதலை ஒப்புக்கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளியாக பாகிஸ்தான் தவிப்பதாக விமர்சித்தார். மேலும் சகிப்புத்தன்மையற்றவர் என்ற விமர்சனங்களுக்கு கடந்த காலங்களில் தேர்தல் முடிவுகள் பதிலளித்ததாகவும் பிரதமர் கூறினார்.

மல்லயா, நீரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்கள் கடன் ஏய்ப்பு செய்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மோடி, தேசத்தை கொள்ளையடித்தவர்கள் ஒவ்வொரு பைசாவையும் திரும்ப செலுத்தியே தீர வேண்டும் எனவும் உறுதியளித்தார்.

Also see...  108 ஆம்புலன்ஸ்க்கு தந்தை யார் தெரியுமா? - திண்டுக்கல்
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...