ஹோம் /நியூஸ் /இந்தியா /

மதுபோதை அடிமைகளுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள்.. மத்திய அமைச்சர் கோரிக்கை

மதுபோதை அடிமைகளுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள்.. மத்திய அமைச்சர் கோரிக்கை

மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்

மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர்

ஆண்டுதோறும் போதை அடிமை காரணமாக சராசரியாக 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் கவலை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மது மற்றும் போதை அடிமைகளுக்கு பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் உருக்கத்துடன் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருப்பவர் கவுஷல் கிஷோர். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான கவுஷல் கிஷோருக்கு ஆகாஷ் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார்.

இவரது மதுபோதை பழக்கத்தால் இளம் வயதிலேயே மரணமடைந்த நிலையில் அமைச்சர் கவுஷல் தொடர்ச்சியாக போதைக்கு எதிராக பரப்புரை செய்து வருகிறார். இவர் உத்தரப் பிரதேச மாநிலம் லம்புவா பகுதியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து மக்களிடையே உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது, "எனது மகன் ஆகாஷ், நண்பர்கள் பழக்கம் காரணமாக மது போதைக்கு அடிமை ஆனான். அவனை போதை அடிமைகள் மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தோம்.

அவன் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டான் என்று நம்பி 6 மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைத்தோம். ஆனால், திருமணத்திற்கு பின்பும் குடித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனான். எனது மருமகள் விதவையாகி விட்டார். 2 வயது பேரனுக்கு தந்தை இல்லை. ஒரு எம்பியாக இருந்தும் எனது மனைவி எம்எல்ஏவாக இருந்துமே எனது மகனை காப்பாற்ற முடியவில்லை. ஒரு சாமானிய மனிதரால் எப்படி பிள்ளைகளை காக்க முடியும். விடுதலை போராட்டத்தின்போது கூட 6.32 லட்சம் மக்கள் தான் உயிர் தியாகம் செய்தனர். ஆனால் ஆண்டுதோறும் போதை அடிமை காரணமாக சராசரியாக 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

இதையும் படிங்க: புல்டோசர் தண்டனை.. காதலியை கொடூரமாக தாக்கிய வாலிபரின் வீட்டை தரைமட்டமாக்கிய அரசு!

போதைக்கு அடிமையான ஒரு அதிகாரியை திருமணம் செய்து கொள்வதை விட ஒரு ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியை திருமணம் செய்வதே நல்லது. எனவே பெண்களை வைத்திருக்கும் பெற்றோர் போதை பழக்கத்திற்கு அடிமையான நபருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம்" என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். முடிந்தவரை போதைக்கு எதிரான இயக்கத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

First published:

Tags: Alcohol, Drug addiction, Marriage, Uttar pradesh