பிரதமர் மோடியை நான் 30 நிமிடங்கள் காக்க வைக்கவில்லை..அவதூறுகளை பரப்ப வேண்டாம்: மம்தா சாடல்

மம்தா பானர்ஜி

தன்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வெளியிட்டு வருவதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடியை தான் 30 நிமிடங்கள் காக்க வைத்ததாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும், போலியான செய்திகளை வெளியிட்டு தன்னை இழிவுபடுத்த வேண்டாம் எனவும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

  மேற்குவங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் பிரதமரிடம் அளித்து விட்டு புறப்பட்டுச் சென்றதாக கூறப்பட்டது.

  பிரதமர் மோடி வந்திறங்கிய விமான தளத்தில், மம்தா பானர்ஜி அவரை சந்தித்து 15 நிமிடங்கள் உரையாடியதாகவும், புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் அருகே மம்தா பானர்ஜிக்காக போடப்பட்ட இருக்கை காலியாக இருக்கும் படமும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு சர்ச்சையானதை தொடர்ந்து மம்தாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு வங்க தலைமைச் செயலாளரை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.

  Also Read: புல்வாமா தாக்குதலில் கணவர் வீரமரணம்.. கணவரின் தடத்தை பின்பற்றி ராணுவத்தில் இணைந்த மனைவி

  இந்தநிலையில் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த மம்தா பானர்ஜி, பிரதமருடனான கூட்டம் முன்னரே ஏற்பாடு செய்யவில்லை எனவும், தன்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரதமர் மோடியை 30 நிமிடங்கள் காக்க வைத்ததாக கூறப்படுவதை மறுத்த அவர், பிரதமரின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற போது தானும், தலைமைச் செயலாளரும் 20 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

  இதுபோன்ற அவதூறுகளால் தன்னை அவமதிக்க வேண்டாம் என கூறியுள்ள மம்தா,  தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் பெற்றி பெற்றதால், மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.  மேற்குவங்க மக்களின் நலனுக்காக பிரதமர் தன் காலில் விழும்படி கூறினாலும்,அதை செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் மம்தா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.  வெள்ளச்சேதம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பிரதமருக்கும் - முதல்வருக்கும் இடையில் தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள மம்தா, பாஜக தலைவர்களும், மேற்குவங்க ஆளுநரும் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: