மகாராஷ்டிராவில் மீண்டும் பொதுமுடக்கம்: முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இறுதி எச்சரிக்கை!

முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பையில் 2021ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி 239 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, பிப்ரவரி 11 அன்று 624 ஆக உயர்ந்தது. அதுவே மார்ச் 11ம் தேதி 1508 ஆக அதிகரித்தது.

  • Share this:
 

2021ம் ஆண்டில் அதிகபட்ச கொரோனா பாதிப்பை மும்பை இன்று சந்தித்ததை தொடர்ந்து மகாராஷ்டிராவில் மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்த என்னை நிர்பந்திக்காதீர்கள் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த பிப்ரவரி மாதத்தின் முதல் வாரம் தொடங்கி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 15,602 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 22,97,793 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 52,811 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த வருடத்திலேயே 15,000 என்ற அளவை இன்று தான் மகாராஷ்டிரா சந்தித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் தான் 15,000 என்ற அளவை தொட்டது. இதே போல தலைநகர் மும்பையில் இன்று 1709 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச பாதிப்பாகும்.

மும்பையில் 2021ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி 239 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, பிப்ரவரி 11 அன்று 624 ஆக உயர்ந்தது. அதுவே மார்ச் 11ம் தேதி 1508 ஆக அதிகரித்தது.

கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து நாக்பூர், தானே, புனே மற்றும் அமராவதி மாவட்டங்களில் பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், மால்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டிப் பேசினார். அப்போது, நான் இவற்றையெல்லாம் மூட விரும்பவில்லை ஆனால் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இது வே கடைசி முறையாக கூறுகிறேன். கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த நிர்பந்திக்காதீர்கள் என அவர் எச்சரித்தார்.
Published by:Arun
First published: