'மது குடிக்கவேண்டாம், வீட்டுக்குள் இருங்கள்’ - வட இந்தியர்களை எச்சரிக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.. காரணம் என்ன?

'மது குடிக்கவேண்டாம், வீட்டுக்குள் இருங்கள்’ - வட இந்தியர்களை எச்சரிக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.. காரணம் என்ன?

கோப்பு படம்

கடந்த ஞாயிறன்று, சஃப்தார்ஜங் ஆய்வகத்தில் பதிவான வெப்பநிலை 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. இது இந்த ஆண்டின் மிகக் குளிரான நிலை எனச் கூறப்படுகிறது.

 • Share this:
  மது குடிப்பதை அடுத்து வரும் சில நாட்களுக்கு தவிர்த்துவிடவேண்டுமென்றும், வீட்டுக்குள் இருக்கவேண்டும் எனவும் வட இந்தியர்களுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

  இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தல் அறிக்கையின்படி,  ”பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் 29-ஆம் தேதி முதல் தீவிரமான Cold wave உருவாக இருப்பதால், விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறும், உடலை ஈரப்பதத்துடன் வைக்குமாறும், வீட்டுக்குள் இருக்குமாறும், மது குடிப்பதை முற்றிலும் தவிர்க்குமாறும்” எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே மிக அதிகமான குளிர் இருக்கவிருக்கும் என கணிக்கப்படும் நிலையில், மது அருந்துவது உடலின் வெப்பநிலையை மேலும் குறைத்துவிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவுறுத்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்கஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலில் பனிப்பொழிவு.. பக்தர்கள் அதிகமாக பகிரும் வீடியோ..

  இந்திய வானிலை ஆய்வு மையத்தில் கூற்றுப்படி, ’கோல்ட் வேவ்’ (Cold Wave) எனப்படுவது, குறைந்தபட்சம் 10 டிகிரி வெப்பநிலையில் கீழ் தொடங்கி, 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று, சஃப்தார்ஜங் ஆய்வகத்தில் பதிவான வெப்பநிலை 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. இது இந்த ஆண்டின் மிகக் குளிரான நிலை எனச் கூறப்படுகிறது.
  Published by:Gunavathy
  First published: