Home /News /national /

இறப்பதற்கு முன்பு இந்திரா காந்தி கூறிய வார்த்தை: ராகுல் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

இறப்பதற்கு முன்பு இந்திரா காந்தி கூறிய வார்த்தை: ராகுல் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

எனது பாட்டி இந்திரா காந்தியின் இறுதி சடங்கு, என் வாழ்நாளில் இரண்டாவது மிகவும் கடினமான நிகழ்வு.  என்னை அழக்கூடாது என்று அவர் கூறியிருந்தார். அதனால்தான் நான் முகத்தை மறைத்துகொண்டு இருந்தேன் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    முன்னாள்  பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது பேரனும்  காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உருக்கமான வீடியோ ஒன்றை தனது யூ டியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,  இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக  இந்திரா காந்தி தன்னிடம் கூறிய வார்த்தைகள் உட்பட பலவற்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்தியாவின் பிரதமராக இருந்த  இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள சக்திஸ்தல்லில் அவரது நினைவிடத்தில்  இந்திரா காந்தியின் பேரனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி,  உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    தனது பாட்டி இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்துவிதமாக ராகுல் காந்தி வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், எனது பாட்டியில் இறுதி சடங்கு, என் வாழ்நாளில் இரண்டாவது மிகவும் கடினமான நிகழ்வு.  என்னை அழக்கூடாது என்று அவர் கூறியிருந்தார். அதனால்தான் நான் முகத்தை மறைத்துகொண்டு இருந்தேன்.  இறப்பதற்கு முன்பாக,  எனக்கு என்ன நடந்தாலும் நீ அழக்கூடாது என்று அவர் கூறினார்.  அவர் என்ன கூறுகிறார் என்பது எனக்கு புரியவில்லை.

    இந்திரா காந்தி உடன் ராகுல்


    2, 3 மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டார். இறக்க போகிறோம் என்பதை அவர் முன்பே அறிந்ந்திருந்தார். வீட்டில் உள்ள அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் ஒருமுறை என்னிடம், டைனிங் டேபிளில் இருந்த எங்கள் அனைவரிடமும், நோயால் இறப்பது மிகப்பெரிய சாபம் என்று சொன்னார். அவருடைய கண்ணோட்டத்தில், இதுவே இறப்பதற்குச் சிறந்த வழியாகும்.. அவருடைய  நாட்டிற்கு... அவவர் விரும்பிய கருத்தைப் பாதுகாப்பதற்கு..” என்று கூறியுள்ளார்.



    என் வீட்டில் என் அப்பா கண்டிப்பானவர்.. முக்கியமாக என் 'சூப்பர்' அம்மா என் பாட்டி உட்பட எனக்கு இரண்டு அம்மாக்கள் இருந்தனர். என் அப்பா கோபப்படும்போது என் பாட்டி என்னை காப்பாற்றுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் படிக்க: பொதுஇடத்தில் சண்டை போட்டுக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள்.. தர்மசங்கடத்தில் கட்சித் தலைமை

    Published by:Murugesh M
    First published:

    Tags: Indra Gandhi, Rahul gandhi

    அடுத்த செய்தி