தேவையில்லாத கருத்துகளை பேசாதீங்க... மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

அமைச்சகங்களில் ஆலோசனை வழங்கும் பொறுப்புகளில் நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களை நியமிக்க வேண்டாம் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

தேவையில்லாத கருத்துகளை பேசாதீங்க... மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
பிரதமர் நரேந்திர மோடி
  • Share this:
உண்மைக்கு மாறான தகவல்களை ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் தெரிவிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம், முதல்முறையாக நேற்று நடைபெற்றது.  இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவிப்பதாகக் கூறினார்.

எனவே, உண்மையான தகவல்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார். தங்களது அமைச்சகங்களில் ஆலோசனை வழங்கும் பொறுப்புகளில் நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களை நியமிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு நிறுத்தாமல், கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

முன்னதாக, காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சர்களுக்கு விளக்கினார்.

இதேபோல, அண்மையில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
First published: August 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading