ஹோம் /நியூஸ் /இந்தியா /

பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கிய மத்திய அரசு

பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கிய மத்திய அரசு

பதஞ்சலி

பதஞ்சலி

பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய நேரடி வருவாய்த்துறை ஐந்து ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

யோகா குரு பாபா ராம்தேவ்வுக்கு சொந்தமான நிறுவனம் பதஞ்சலி. இந்த பதஞ்சலி நிறுவனம், டூத்பேஸ்ட், நூடுல்ஸ், துணி துவைக்கும் பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை நேரடி கிளைகள் மூலம் விற்பனை செய்துவருகிறது. பதஞ்சலி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. ஆயுர்வேத முறைப்படி பொருள்களைத் தயாரிப்பதாக பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்துவருகிறது. பதஞ்சலி நிறுவனமும், பாபா ராம்தேவ் சர்ச்சைக்கு பெயர் பெற்றவை.

கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தது பதஞ்சலி. கொரோனில் என்ற பெயரிடப்பட்டு அந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்தது. அறிவியல் பூர்வமாக அப்படி எதுவும் நிரூபிக்கப்படப்படாத நிலையில், கொரோனில் அறிமுக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் பாபா ராம்தேவ். இந்தநிகழ்வு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதனையடுத்து, கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் அதிகரிக்கக் கூடியது என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் அளித்தது.

பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் கொரோனில் கிட் என்ற பெயரில் அதனை மீண்டும் அறிமுகம் செய்தது பதஞ்சலி. அதில், அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து, ஹலோபதி மருத்துவர்களுக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசியதற்கு தேசிய அளவில் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையடுத்து, அவர் மன்னிப்பு கோரினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வரி விலக்கு தர வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் விண்ணப்பித்தது. அதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆராய்ச்சி சங்கம் என்ற விதிகளின் அந்நிறுவனத்துக்கு வழங்கப்டும் நன்கொடைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Baba Ramdev, Patanjali