”உங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக அளியுங்கள்”- பினராயி விஜயன் வேண்டுகோள்

”உங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக அளியுங்கள்”-  பினராயி விஜயன் வேண்டுகோள்
கேரள முதலவர் பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: August 27, 2018, 9:12 AM IST
  • Share this:
கேரள மக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதியாக அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் பெய்த வரலாறு காணாத பெருமழையால்  நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி கடந்த 18 நாட்களில் மட்டும் 302 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், மொத்தம் 1,435 நிவாரண முகாம்களில் 4,62,456 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், “மலையாளிகள் தங்களது வலிமையை காட்ட வேண்டிய நேரம் இது என்றும், கேரள மக்கள் உள்நாடு, வெளிநாடு என எங்கு பணிபுரிந்தாலும், தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக அளிக்க வேண்டும்” எனவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களிடம்   கேட்டுக் கொண்டுள்ளார்.


மாநிலத்தையே ஒட்டுமொத்தமாக மறு கட்டமைப்பு செய்ய வேண்டி உள்ளதால், ஒரு மாத ஊதியத்தை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.  மேலும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ராணுவத்தினர், தன்னார்வலர்கள், நிதியுதவி அளித்தவர்கள் என அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
First published: August 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading