Home /News /national /

வெள்ளிக்கிழமை தோறும் விரதம் - டிரம்புக்கு சிலை வைத்த இளைஞரின் அடுத்த அதிரடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை தோறும் விரதம் - டிரம்புக்கு சிலை வைத்த இளைஞரின் அடுத்த அதிரடி அறிவிப்பு

டிரம்புக்கு சிலை வைத்த இளைஞர்

டிரம்புக்கு சிலை வைத்த இளைஞர்

தனது வீட்டில் டிரம்ப் புகைப்படத்தையும் அவர் மாட்டியதோடு, கணினி மற்றும் செல்போன் டிஸ்பிளேவிலும் டிரம்ப் புகைப்படத்தையே அவர் வைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபாடு செய்து பரபரப்பை ஏற்படுத்தி இளைஞர், வாரம் தோறும் வெள்ளிகிழமை விரதம் இருக்கப்போவதாக கூறி அதிர வைத்துள்ளார்.

    தெலங்கானா மாநிலம் ஜனகாம்மா மாவட்டத்தை சேர்ந்த பூஸ்சா கிருஷ்ணா என்னும் இளைஞர் தனது வீட்டின் முன்பு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சிலை வைத்துள்ளார். 6 அடி உயரம் கொண்ட டிரம்ப் சிலைக்கு நாள்தோறும் இந்த இளைஞர் பூஜை செய்து வருகிறார்.

    கடந்த 14-ம் தேதி டிரம்ப் பிறந்த நாளையொட்டி, பால் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதனிடையே இந்தியாவில் பல்வேறு தேசிய தலைவர்களுக்கு சிலைகள் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிலைக்கு இளைஞர் கிருஷ்ணா தினந்தோறும் பூஜை செய்து வருவது எதற்காக என்று தெரியாமல் அப்பகுதியில் உள்ள மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.



    ”டிரம்ப் எனக்கு கடவுளுக்கு நிகரானவர். ரூ.1.5 லட்சம் செலவில் அவருக்காக சிலை வைத்துள்ளேன். இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை டிரம்புக்காக விரதம் இருக்க உள்ளேன்” என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

    தனது வீட்டில் டிரம்ப் புகைப்படத்தையும் அவர் மாட்டியதோடு, கணினி மற்றும் செல்போன் டிஸ்பிளேவிலும் டிரம்ப் புகைப்படத்தையே அவர் வைத்துள்ளார்.

    Also See...

    Published by:Sankar
    First published:

    Tags: Donald Trump

    அடுத்த செய்தி