Home /News /national /

இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ட்ரம்ப் மறுப்பு?

இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ட்ரம்ப் மறுப்பு?

வெள்ளை மாளிகையில் மோடி - ட்ரம்ப் (கோப்புப் படம்)

வெள்ளை மாளிகையில் மோடி - ட்ரம்ப் (கோப்புப் படம்)

2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

  • News18
  • Last Updated :
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவர் கலந்துகொள்ள மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் நடக்கும் இந்திய குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம்.

அடுத்தாண்டு ஜனவரியில் நடக்க இருக்கும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இந்தியா ஆகஸ்ட் மாதம் கடிதம் அனுப்பியது. இதனை வெள்ளை மாளிகையும் உறுதி செய்திருந்தது.

2015 குடியரசு தினவிழாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா


இந்த அழைப்பு குறித்த முடிவு எதுவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் குடியரசு நாள் விழாவில் ட்ரம்ப் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை இதுவரை எந்தக் கருத்தையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்..

கொச்சி தேவசம் போர்டில் பிராமணர் அல்லாத 54 பேர் அட்சகர்களாக தேர்வு!

Also see..

Published by:Sankar
First published:

Tags: Modi, Republic day, Trump

அடுத்த செய்தி