• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குஜராத்துக்கு செல்கிறார் ட்ரம்ப்: பொதுக்கூட்டத்தில் பேசத் திட்டம்!

குஜராத்துக்கு செல்கிறார் ட்ரம்ப்: பொதுக்கூட்டத்தில் பேசத் திட்டம்!

ட்ரம்ப்  (REUTERS)

ட்ரம்ப் (REUTERS)

  • Share this:
    அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறைப் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ட்ரம்ப் செல்கிறார்.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது மனைவி மெலனியா டிரம்ப்புடன் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்திற்கு ட்ரம்ப் செல்ல உள்ளார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவுகள் மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அமெரிக்காவிடம் இருந்து 1 லட்சத்து 30,000 கோடி ரூபாய் மதிப்பில் 24, MH-60R ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அந்த செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்தில் உள்ள காந்தி சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப்பார்க்கும் ட்ரம்ப் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்ட மேடையில் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: Delhi Election Results 2020 LIVE Updates | டெல்லி தேர்தல் முடிவுகள் - ஆம் ஆத்மி முன்னிலை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: