பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது

டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி

இந்த விருதை பிரதமர் மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சித்து பெற்று கொண்டார்.

  • Share this:
இந்தியா- அமெரிக்கா இருநாட்டு நட்புறவை மேம்படுத்தியதற்காக, அமெரிக்க அரசின் "லிஜியன் ஆப் மெரிட்" என்ற உயரிய விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் பிரையன் வெளியிட்ட அறிக்கையில், இருநாடுகளின் உறவை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு, இந்த விருதை அதிபர் டிரம்ப் வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருதை பிரதமர் மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சித்து பெற்று கொண்டார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு இந்த விருது இதற்கு முன்னாள் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமரின் தலைமை பண்பு மற்றும் இந்தியா சர்வதேச தலைமை இடத்தை ஏற்க வேண்டும் என்ற கொள்கை, இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்தவும், சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அவரது கொள்கைகளை இந்த விருது அங்கிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: