ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கு இந்தியா ஒப்புதல்! டிரம்ப் விளக்கம்

ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கு இந்தியா ஒப்புதல்! டிரம்ப் விளக்கம்

டிரம்ப் மோடி

டிரம்ப் மோடி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்காவிலிருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத்துறை தளவாடங்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் நாளை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகும், மோடியும் டிரம்பும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், ‘இந்தோ - பசுபிக் பகுதிகளில் எளிமையாகவும் சரிவிகிதமாகவும் இணைந்து பணியாற்றுவதற்கும் விரிவான வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வதற்கும் நானும் மோடியும் ஒப்புக்கொண்டுள்ளோம்.

மேலும், விரிவான பாதுகாப்புத்துறை விரிவாக நாங்கள் விவாதித்தோம். மேலும், பாதுகாப்புத்துறையில் விரிவான ஒப்பந்தம் செய்வதற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்த ஒப்பந்தம் 24 எம்.எஃச்- 60 ரோமியோ ஹெலிகாப்படை இந்தியா கொள்முதல் செய்வதை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த இரண்டு நாள்களில் நேற்று மைதானத்தில் எனக்கு கிடைத்தது மிகப் பெரிய கௌரவம்.

அங்கே எனக்காக கூடியிருந்த மக்களைவிட மோடிக்காக கூடியிருந்த மக்கள் அதிகமாக இருக்கும். ஒவ்வொருமுறை நான் உங்களுடைய பெயரை உச்சரிக்கும்போது அவர்கள் ஆர்பரித்தனர். இங்கே மக்கள் உங்களை விரும்புகிறார்கள். நாளை எங்களுடைய பிரதிநிதிகள் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கான பாதுகாப்புத்துறை தளவாடங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

Also see:

First published:

Tags: Trump India Visit