• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘பிச்சை எடுக்க விருப்பமில்லை’....பேனா விற்று சம்பாதிக்கும் ஏழை பாட்டி - இணையத்தில் வைரல்!

‘பிச்சை எடுக்க விருப்பமில்லை’....பேனா விற்று சம்பாதிக்கும் ஏழை பாட்டி - இணையத்தில் வைரல்!

Ratan

Ratan

நான் பிச்சை எடுக்கவில்லை, பேனாக்களை விற்று வருகிறேன்.அதனை வாங்கி கொள்ளுங்கள் என்றார், அது என்னை மிகவும் நெகிழ்வடைய செய்தது.

  • Share this:
தற்காலத்தில் உலகின் எந்த ஒரு மூலையில் எந்த சம்பவம் நடைபெற்றாலும் உடனே வைரலாகி விடுகிறது. சமூக ஊடகங்களை தவறாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துகின்றனர். ‘தி ரியூப்’ இந்தியாவின் முக்கிய ஆடை நிறுவனங்களில் ஒன்று ஆகும். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஷிகா ரதி என்பவர்தான் பேனா விற்று சம்பாதிக்கும் ஏழை பாட்டியை உலகறிய செய்துள்ளார்.

சமீபத்தில் அவர் தனது நண்பருடன் காரில் வெளியே சென்ற போது அங்கு ரோட்டில் வயதான பெண்மணி ஒருவர் பேனா விற்று கொண்டிருந்தார். அதனைப் பார்த்த ரதி, அந்த பாட்டிக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து உடனே அந்த பாட்டியினை அழைத்து பணம் எடுத்து தர முயன்றார். ஆனால் அதனை வாங்க மறுத்த அந்த பாட்டி, எனக்கு பணம் வேண்டாம். நான் பிச்சை எடுக்கவில்லை என்று கூறிவிட்டு தான் வைத்திருந்த பேனா பெட்டியை காட்டினார். ஒரு பேனாவின் விலை ரூ 10. இதனை வாங்கி கொள்ளுங்கள் என்று அன்போடு கூறினார் அந்த பாட்டி. அதனை தான் விற்கும் பேனாவின் அட்டை பெட்டியிலும் எழுதி உள்ளார். பிறகு ரதி , அந்த பாட்டியிடம் இருந்து பேனாக்கள் வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தை கொடுத்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Shikha Rathi (@sr1708)






இதனை தொடர்ந்து அந்த பாட்டியை ஒரு புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து‘இன்று நான் ரத்தன் என்ற வயதான பாட்டியை பார்த்தேன். நம்மை போலவே அவர் ஒரு வெற்றியாளர். இன்று அவரை நான் சந்தித்தது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். நான் பணம் தருவதாக சொன்னேன். அவர் மறுத்துவிட்டார்.நான் பிச்சை எடுக்கவில்லை, பேனாக்களை விற்று வருகிறேன்.அதனை வாங்கி கொள்ளுங்கள் என்றார், அது என்னை மிகவும் நெகிழ்வடைய செய்தது.

Also read:  #RejectZomato ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்த தமிழர்கள் – மன்னிப்பு கேட்ட சொமோட்டோ நிறுவனம்!

நான் அவரிடம் பேனாக்கள் வாங்கி கொண்டு பின்னர் அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ரத்தனுடைய கண்களில் உள்ள நன்றியை காண முடிந்தது. அதுவே எங்களுக்கு போதுமான சந்தோசத்தை கொடுத்தது. ரத்தனுடைய நேர்மையான புன்னகை, கனிவான இதயம், அணுகுமுறை எங்களை ஈர்த்தது. அதனால் நான் அவரிடம் இருந்து அதிக பேனாக்களை வாங்கினேன்.

இந்த பாட்டியை புனேவில் உள்ள எம்ஜி சாலையில் பார்க்கலாம். என்னைப் போலவே நீங்களும் அந்த வயதான பாட்டிக்கு உதவி செய்யுங்கள். இது நம் அனைவரின் கடமை. இது போன்று உள்ளவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இது நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை உண்டாக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்றுவருகிறது. ஷிகா ரதியின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: