பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி - கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து உதவியதற்காக டொமினிக்கன் பிரதமர் உருக்கம்
பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி - கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து உதவியதற்காக டொமினிக்கன் பிரதமர் உருக்கம்
தடுப்பு மருந்தைப் பெறும் டொமினிக்கன் பிரதமர்
கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து உதவியதற்காக இந்தியப் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் டொமினிக்கன் பிரதமர் ரூசிவெல்ட் ஸ்கெர்ரிட் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் தற்போது உலகின் முக்கிய நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலையில், ஜனவரி 19-ம் தேதி டொமினக்கன் பிரதமர் ரூஸிவெல்ட் ஸ்கெர்ரிட் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து உதவவேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கைவைத்திருந்தார். இந்தநிலையில், நேற்று டொமினக்கன் நாட்டுக்கு 35,000 கொரோனா தடுப்பு மருந்து இந்தியா வழங்கியுள்ளது.
அந்த கொரோனா தடுப்பு மருந்தை டொமினக்கன் பிரதமர் ரூஸிவெல்ட்டும், அந்நாட்டு அமைச்சர்களும் விமான நிலையம் வந்து பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து தெரிவித்த ரூஸிவெல்ட், ‘இவ்வளவு விரைவாக இந்தியா தடுப்பூசி வழங்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த கொரோனா பாதிப்பை ஒருவர் உலகளாவிய பெருந்தொற்றாக கருத்தில் கொண்டால் முதல் அவர்களுக்கு அவர்களுடைய நாட்டு மக்கள் எண்ணிக்கைதான் மனதில் வரும்.
ஆனால், பிரதமர் நரேந்தி மோடி எங்களுடைய கோரிக்கையையும் கணக்கில் கொண்டு, எங்கள் நாட்டு மக்களுக்கு சமமான முக்கியத்துவம் கொடுத்ததுதான் காரணமாகதான் இது நடந்திருக்கிறது’ என்று தெரிவித்தார். டொமினிக்கன் நாட்டுக்கு உதவுவதைத் தவிர்த்து, 24 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை உகாண்டா, ஈக்குவேடார், மொரோக்கா, நமிபியா உள்ளிட்ட 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதியளித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.