Home /News /national /

வீட்டு சாவியை வேலைக்காரரிடம் தந்துவிட்டு அமெரிக்கா சென்ற உரிமையாளர்.. திரும்பி வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

வீட்டு சாவியை வேலைக்காரரிடம் தந்துவிட்டு அமெரிக்கா சென்ற உரிமையாளர்.. திரும்பி வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

மாதிரி படம்

மாதிரி படம்

மிகவும் நம்பிக்கையான வேலைக்காரர் என்பதல் வீட்டின் சாவிகளை கூட உரிமையாளர் மோகன் குமாரிடம் தருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    வீட்டில் வேலை செய்த பணி ஆள் ஒருவர் அந்த வீட்டின் உரிமையாளரிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்பில் பணம், நகை மற்றும் பொருள்களை திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

    மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாப்பி பாக் என்ற பகுதியில் வசித்து வரும் நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் குமார் என்ற 26 வயது இளைஞரை தனது வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளார்.  மோகன் குமார் அந்நபரிடம் ஐந்து ஆண்டுகளாக வேலைப் பார்த்து வருகிறார். மிகவும் நம்பிக்கையான வேலைக்காரர் என்பதல் வீட்டின் சாவிகளை கூட உரிமையாளர் மோகன் குமாரிடம் தருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்நிலையில், இம்மாதம் 4ஆம் தேதி வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டு விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது தனது வீட்டை சாவியுடன் மோகன் குமாரிடம் பார்த்துக்கொள்ளுமாறு ஒப்படைத்துச் சென்றுள்ளார். சுமார் 15 நாள்கள் கழித்து அமெரிக்காவில் இருந்து திரும்பி வீடு வந்து பார்த்த போது தான் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து பணம், நகை உள்ளிட்ட பொருள்களை மோகன் குமார் களவாடிச் சென்றுள்ளார்.

    அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறை சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்து பார்த்ததில் மோகன் குமார் அந்த வீட்டில் இருந்து பணம், நகை ஆகியவற்றைத் திருடி உரிமையாளரின் காரிலேயே அவற்றை வைத்து ஓட்டி சென்றுள்ளார். அங்கிருந்து ரமேஷ் நகர் மெட்ரோ ஸ்டேஷன் வரைக்கும் காரில் சென்று திருடியதை பதுக்கி வைத்தது சிசிடிவி ஆதாரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. காரில் மோகன் குமாருக்கு உதவியாக மற்றொரு நபரும் இருந்ததைத் தொடர்ந்து இருவரையும் தேடி காவல்துறை பீகார் விரைந்துள்ளது.

    இதையும் படிங்க: திருப்பதியில் விஐபி தரிசனத்திற்கு 140 பேருடன் வந்து அதிர்ச்சி தந்த அமைச்சர்.. வெடித்த சர்ச்சை..புலம்பும் பக்தர்கள்!

    அங்கு மோகன் குமார் மற்றும் திருட்டுக்கு உதவியாக இருந்த அவரது உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.முதல் கட்டமாக ரூ.5 கோடி மதிப்பாலான பணத்தை பறிமுதல் செய்த காவல்துறை மீதமுள்ள நகை மற்றும் பணத்தை மீட்க முயற்சித்து வருகின்றன. இருவரும் அந்த உரிமையாளர் வீட்டில் இருந்து சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான பொருள்களை களவாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Delhi, Stealing, Theft, Thief

    அடுத்த செய்தி