உள்நாட்டு விமான சேவை தொடக்கம் - கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

பயணிகள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும்.

உள்நாட்டு விமான சேவை தொடக்கம் - கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
கோப்புப் படம்
  • Share this:
உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் போது விமான சேவை நிறுவனங்கள் மற்றும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகளை விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அப்போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக பயணிகள், விமான நிறுவனங்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள்


விமான சேவை தொடங்கும் முதல் நாளில் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டும் இயக்க அனுமதிக்கப்படும். அதன்பிறகு விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கைப்பையுடன், கூடுதலாக ஒரு பை மட்டும் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள். இணையதளத்தில் மட்டும் செக்-இன் செய்து கைப்பைக்கான டேக்-குகளை பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்போர் மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விமானத்தில் பயணிக்க முடியாது.பயணிகள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் அல்லது படிவத்தில் தங்களது விபரத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக குறியீடுகள் வரைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்குள் நுழைவதில் இருந்து பயணம் முடியும் வரை பயணிகள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

பயணிகள் தங்களது உடல்வெப்ப நிலையை அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்தில் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். பயண நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக உடமைகளை ஒப்படைத்துவிட வேண்டும்.

பயணிகளிடம் பாதுகாப்பு ஊழியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். விமானத்தில் ஏறும்போது முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயணிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் கழிவறைகளை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். கழிவுறைக்கு செல்லுவதற்கு வரிசையில் காத்திருக்கக் கூடாது. குழந்தைகள், முதியோருடன் ஒருவர் உடன் செல்லலாம்.

விமானத்தினுள் பயணிகளுக்கு உணவு வழங்கக்கூடாது, ஒவ்வொரு இருக்கையிலும் குடிநீர் பாட்டில் வைக்க வேண்டும்.

விமானத்திற்குள் நாளிதழ், வார இதழ்கள் வழங்கப்படாது என்று விமான போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading