Home /News /national /

கிடுகிடுவென உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள்.! வெளிநாட்டு பயண டிக்கெட் விலையோ குறைவு.. காரணம் என்ன? 

கிடுகிடுவென உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள்.! வெளிநாட்டு பயண டிக்கெட் விலையோ குறைவு.. காரணம் என்ன? 

உலகம் முழுவதும் 3 அலைகளாக கொரோனா வைரஸின் தாக்கம், தற்போது சற்றே குறைந்துள்ளது. இதனால் நாடுகளுக்குகிடையிலான விமான போக்குவரத்து சேவை மீண்டும் முழு வீச்சில் இயங்கி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
விமான எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கோடை விடுமுறைக்காக விமானத்தில் சுற்றுலா செல்ல காத்திருப்போருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல, மெல்ல விஸ்வரூபம் எடுத்து பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கி போட்டது. குறிப்பாக, எண்ணற்ற லாக்டவுன்களை சர்வதேச நாடுகள் அறிவித்த காரணத்தால், விமான போக்குவரத்து துறை கடும் நெருக்கடிகளை சந்தித்தது.

உலகம் முழுவதும் 3 அலைகளாக கொரோனா வைரஸின் தாக்கம், தற்போது சற்றே குறைந்துள்ளது. இதனால் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து சேவை மீண்டும் முழு வீச்சில் இயங்கி வருகிறது. விமான சேவைக்கான கட்டணங்களும் பெரிதாக உயர்த்தப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பெரும்பாலான நாடுகளில் மீண்டும் பொருளாதார சீர்குலைவை கொண்டு வந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரால் கச்சா எண்ணெய்யின் விலையோடு, விமான எரிபொருள் விலையும் உயர்ந்து வருகிறது.

போர் தொடங்கியதில் இருந்தே விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எப்., எனும் பெட்ரோலிய எரிபொருள் விலை தாறுமாறக உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் 1ம் தேதி 5வது முறையாக விமான எரிபொருள் கட்டணம் உயர்த்தப்பட்டது. டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ. 95,350.66 ஆக இருந்தது. கடந்த மார்ச், 2021ம் ஆண்டு ஒரு கிலோ லிட்டர் எரிபொருளின் விலை ரூ. 59,400.91 ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் பலமடங்கு விலை அதிகரித்துள்ளது.

ALSO READ | “வாரிசு அரசியலை பாஜகவுக்குள் அனுமதிக்க மாட்டேன்“ - பிரதமர் மோடி
 இதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 129.47 டாலர் அளவிற்கு உயர்ந்தது ஆகும். இதுவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 68.18 டாலர் ஆக இருந்த குறிப்பிடத்தக்கது. விமான எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உள்நாட்டு விமானச்சேவைக்கான கட்டணம் கடந்த 4 வாரங்களில் மட்டும் 40 சதவீதம் வரை 15 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

உள்நாட்டுத் துறைகளில், விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட்டுகளின் விலையை 15 நாட்களுக்கு ஒரு கட்டணக் குழுவில் நிர்ணயம் செய்து வருகிறது. உதாரணமாக, மார்ச் 1ம் தேதி, மார்ச் 16 வரையிலான விமானங்களுக்கான டிக்கெட்டுகளை கட்டண உச்சவரம்பை விட அதிகமாகவோ அல்லது தரைக் கட்டணத்தை விட குறைவாகவோ விற்க முடியாது. எவ்வாறாயினும், விமான நிறுவனங்கள் மார்ச் 17 விமானங்களுக்கான டிக்கெட்டுகளை தங்களுக்கு ஏற்றதாகக் கருதும் விலையில் விற்பனை செய்யலாம்.

ALSO READ |  இன்று உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்
 தற்போது வரை உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நீடித்து வருவதால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Flight, Flight travel

அடுத்த செய்தி