Home » News » National » DOG SHAKES HANDS BLESSES DEVOTEES AT MAHARASHTRA TEMPLE SKV

வரிசையா வாங்க.. அனைவருக்கும் என் ஆசி உண்டு... மகாராஷ்டிராவில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

மகாராஷ்டிராவில் நாய் ஒன்று கோவிலுக்கு வழிபாடு செய்யவரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, கைகொடுக்கும் வீடியோ இணையவாசிகள் மத்தியில் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

வரிசையா வாங்க.. அனைவருக்கும் என் ஆசி உண்டு... மகாராஷ்டிராவில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
மஹாராஷ்டிராவில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்
  • Share this:
மகாராஷ்டிராவில் உள்ள அஹ்மத்நகர் மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு, நாய் ஒன்று கைகுலுக்கி, ‘ஆசீர்வாதம்’ அளிக்கின்றது. இதனை பலரும் வீடியோ எடுத்து தங்கள் இணையதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கோவிலில் கடவுளை தரிசித்து விட்டு வெளியில் வரும் பக்தர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கைகளை அன்போடு நீட்டுகின்றது. நாயின் செயலை கண்டு வியந்து போன பக்தர்கள் அதோடு செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

 


 




 



 



கோவிலுக்கு வரும் பக்கதர்களை மகிழ்வித்து வரும் நாயின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் இந்த வீடியோஷேர் செய்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading