ஹோம் /நியூஸ் /இந்தியா /

கழிவறைக்குள் சிறுத்தையுடன் வைத்து பூட்டப்பட்ட நாய்.. 7 மணிநேர போராட்டத்துக்கு பின்பு நாயை உயிருடன் மீட்ட தருணம்.. (வைரல் வீடியோ)

கழிவறைக்குள் சிறுத்தையுடன் வைத்து பூட்டப்பட்ட நாய்.. 7 மணிநேர போராட்டத்துக்கு பின்பு நாயை உயிருடன் மீட்ட தருணம்.. (வைரல் வீடியோ)

நன்றி: பத்திரிக்கையாளர் ப்ரஜ்வால் ட்விட்டர் பக்கம்

நன்றி: பத்திரிக்கையாளர் ப்ரஜ்வால் ட்விட்டர் பக்கம்

சிறுத்தைக்கு மயக்க ஊசி குத்தப்பட்டது. சிறுத்தை மயக்கமடைந்த பின்னர் வனத்துறையினர் அதனை பத்திரமாக மீட்டு மீண்டும் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை (பிப்.4) அன்று ஒரு தெரு நாய் சிறுத்தையுடன் கழிவறையில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 7 மணி நேரம் இரு விலங்குகளும் அந்த கழிவறையில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் நாயை சிறுத்தை ஒன்றுமே செய்யாமல் இருந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தட்சிணா கன்னட மாவட்டத்தின் கடபாவில் உள்ள பிலினேல் கிராமத்தில் நடந்துள்ளது.

இது குறித்து The News Minute பத்திரிகையாளர்  கூறுகையில், ”ஒரு தெரு நாய் சிறுத்தையால் துரத்தப்பட்டு வந்ததாகவும், அப்போது அங்கிருந்த ஒரு குடியிருப்பு கழிப்பறையில் மறைந்திருக்கும் இடத்தைக் கண்டு உள்ளே சென்றதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், நாய் மறைந்திருந்த இடத்தை கண்ட சிறுத்தையும் கழிவறைக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டை சேர்ந்த பெண் காலை எழுந்து கழிவறையை திறந்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக கழிவறை கதவை வெளியில் இருந்து தாளிட்டுள்ளார். பின்னர் காவல்துறைக்கு இதனை தெரியப்படுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தனர். அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளையில், வனத்துறையினரின் இந்த நடவடிக்கையினால், சிறுத்தை ஆத்திரமடைந்து உள்ளே இருக்கும் நாயை வேட்டையாடி விடும் என்ற ஒரு அச்சமும் வனத்துறை அதிகாரிகளுக்கு எழுந்தது. மேலும் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்த கழிவறையின் மேற்கூரையை பிரித்துள்ளனர். 

நான்கு சுவருக்கு நடுவே சிக்கிக் கொண்டதால் பயந்து போன சிறுத்தை, கழிவறையின் ஒரு மூலையிலும், நாய் மற்றொரு மூலையிலும் அச்சத்துடன் படுத்துக்கிடந்தன. இதையடுத்து, சிறுத்தைக்கு மயக்க ஊசி குத்தப்பட்டது.
 
View this post on Instagram

 

A post shared by The News Minute (@thenewsminute)சிறுத்தை மயக்கமடைந்த பின்னர் வனத்துறையினர் அதனை பத்திரமாக மீட்டு மீண்டும் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அதேபோல, கழிவறையில் சுமார் 7 மணிநேரம் சிறுத்தையுடன் மரண பீதியில் இருந்த நாயும் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் பெரிதும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Dog, Dog stuck, Forest Department, Karnataka, Leopard, Toilet