ரேஷன் கார்டில் நாயின் பெயரை சேர்த்து பொருட்களை வாங்கிய நபர்

ரேஷன் கார்டில் நாயின் பெயரை சேர்த்து பொருட்களை வாங்கிய நபர்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: September 26, 2018, 4:29 PM IST
  • Share this:
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் ரேஷன் கார்டில் தான் வளர்க்கும் நாயின் பெயரை சேர்த்து பொருட்களை வாங்கியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்திலுள்ள தார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நர்சிங் போதர் (75). இவரது குடும்பத்துக்கான ரேஷன் கார்டில் நர்சிங் போதர், அவரது மனைவி  மற்றும் வளர்ப்பு மகன் ராஜூ ஆகிய 3 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், ரேஷன் கார்டுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என நர்சிங் போதரிடம் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.


இதன்பேரில் நர்சிங் போதர் தனது ஆதார் எண்ணையும், தனது மனைவியின் ஆதார் எண்ணையும் ரேஷன் கார்டுடன் இணைத்தார். ராஜூவின் ஆதார் எண் குறித்து நர்சிங் போதரிடம் கேட்டபோது, அவர் அளித்த பதிலைக் கேட்டு ரேஷன் கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உண்மையில், ராஜூ என்பது நர்சிங் போதரின் வளர்ப்பு நாயின் பெயராம். மேலும், ராஜூவின் பெயரை பயன்படுத்தி உணவு தானியங்களை நர்சிங் வாங்கியதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, ரேஷன் கடை ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தார் உணவு வழங்கல் துறை அதிகாரி ஆனந்த் கோலே கூறுகையில், 'இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
First published: September 26, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading