முகப்பு /செய்தி /இந்தியா / 23 நாள்களுக்குப் பின் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நாய்குட்டி.. வைரல் வீடியோ

23 நாள்களுக்குப் பின் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நாய்குட்டி.. வைரல் வீடியோ

துருக்கியில் 23 நாள்களுக்குப் பிறகு நாய்குட்டி மீட்பு

துருக்கியில் 23 நாள்களுக்குப் பிறகு நாய்குட்டி மீட்பு

துருக்கி நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த நாய்குட்டி ஒன்று 23 நாள்களுக்குப் பின் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaIstanbul Istanbul

துருக்கி-சிரியா எல்லையில் பிப்ரவரி 6ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது. துருக்கியில் 44,000 மேற்பட்டோர் மற்றும் சிரியாவில் சுமார் 6,000க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 50,000க்கும் மேற்பட்டோர் இந்த கோர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மீட்பு மற்றும் புணரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பேரிடரில் சுமார் 2 லட்சம் கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், சுமார் 19 லட்சம் பேர் வசிப்பிடத்தை இழந்து தவித்து வருகின்றனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5.3 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹதாய் பிராந்தியத்தில் உள்ள அந்தாக்யா என்ற பகுதியில், தன்னார்வல அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்ட போது ஹஸ்கி வகை நாய் குட்டி ஒன்று 23 நாள்களுக்குப் பின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. நாய்குட்டியை பார்த்த தன்னார்வளர்கள் அதை ஆசையுடன் மீட்டு நீர், உணவுகளை வழங்கினர்.

நாய் பத்திரமாக மீட்டு நலமுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், விலங்கு பிரியர்கள் நெகிழ்ச்சியுடன் அதற்கு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட நாய்க்கு அலெக்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.

விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு ஒன்று அந்த நாய்யை தத்தெடுத்து கவனித்து வருகிறது. நாய் நலமுடன் இருந்தாலும், 23 நாள்கள் முறையாக சாப்பிடாததால் உடல் மெலிந்து காணப்படுவதாக கூறிய விலங்குகள் நல அமைப்பு, சீக்கிரம் அலெக்ஸ் பழைய நிலைக்கு திரும்பும் என உறுதி அளித்துள்ளன.

First published:

Tags: Turkey, Turkey Earthquake, Viral, Viral Video