இந்தியாவில் இதற்கு முன்பு ஆண் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது இயல்பானதாக இருந்தது. இந்த நடைமுறை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. இருப்பினும், முதல் மனைவிக்கு உடல்தகுதி சரியில்லை என்றாலோ அல்லது அவர் உயிரிழந்த சூழலிலோ ஆண் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
சமூக, கலாச்சார ரீதியாக இரண்டாம் திருமணம் சரியானதா, தவறானதா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், சட்ட ரீதியாக இரண்டாம் மனைவிக்கு கணவரின் சொத்தில் பங்கு உண்டா என்ற கேள்விக்கு விடை காண வேண்டியிருக்கிறது.
சொத்து பங்குரிமை உண்டா?
சொத்துரிமை குறித்து தனிநபர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்வியில், “எனக்கு உடன் பிறந்தவர்கள் 4 பேர். எங்கள் தாயார் கடந்த 2005ஆம் ஆண்டில் மறைந்து விட்டார். அதை தொடர்ந்து, 2006ஆம் ஆண்டில் எங்கள் தந்தை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர் இறந்துவிட்டார்.
எங்கள் தந்தை ரியல் எஸ்டேட் துறையில் ரகசியமாக பல முதலீடுகளைச் செய்திருந்தார். அந்த சொத்துகளில், எங்களுக்கும், எங்கள் சித்திக்கும் உள்ள பங்குரிமை என்ன? என் தந்தைக்கு உடன்பிறந்தவர்கள் அவரது கையெழுத்தைப் போலியாக போட்டு, எங்கள் தாத்தாவின் சொத்தை விற்று விட்டனர். அதை எப்படி நாங்கள் திரும்பப் பெறுவது?’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சொத்துரிமை உண்டு
மேற்கண்ட கேள்விக்கு சட்ட வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். அந்த பதிலில், “உங்கள் தந்தை ஹிந்துவாக இருப்பார் எனக் கருதுகிறோம். எந்தவித உயில் பத்திரமும் எழுதி வைக்காமல் அவர் இறந்திருக்கிறார். ஹிந்து ஒருவர் உயிரிழக்கும் போது, அவரது சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதை ஹிந்து வாரிசு உரிமைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது.
உங்கள் தந்தையின் தனது முதல் மனைவியின் (உங்கள் தாயார்) இறப்புக்கு பிறகு தான் மறுமணம் செய்திருக்கிறார். ஆகவே, அது சட்ட ரீதியாக செல்லுபடியாகின்ற திருமணம் தான். அந்த வகையில், உங்கள் சித்தி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகிய அனைவருக்குமே ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி சொத்தில் சம அளவு பங்கு உண்டு. இது மட்டுமல்லாமல், தந்தை சொத்தின் 6-இல் ஒரு பங்கு உங்கள் சித்தியை சேர்ந்தது.
ALSO READ | உங்கள் ஆதார் அட்டையின் விவரங்களை எத்தனை முறை மாற்றிக் கொள்ளலாம் - தெரிந்து கொள்ளுங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Property, Property tax