நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்!

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: June 17, 2019, 10:26 AM IST
நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்!
டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்
Web Desk | news18
Updated: June 17, 2019, 10:26 AM IST
மேற்குவங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, அம்மாநிலத்தில் மருத்துவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை சந்திக்க கடந்த வியாழக்கிழமை சென்ற மம்தா பானர்ஜி, 4 மணி நேரத்தில் போராட்டத்தை கைவிடாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார். இதற்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். வெள்ளிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

மேற்கு வங்க அரசின் நடவடிக்கையை கண்டித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்க சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு இந்திய மருத்துவ கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சை தவிர்த்த பிற சிகிச்சைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வெளிநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். எஸ்மா போன்ற கடுமையான சட்டங்களை பயன்படுத்த விரும்பவில்லை என்றும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மேற்கு வங்க மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

Also see... மதுரையில் காவல்நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை: பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...