நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் போராட்டம்

Web Desk | news18
Updated: July 30, 2019, 3:23 PM IST
நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் போராட்டம்
Web Desk | news18
Updated: July 30, 2019, 3:23 PM IST
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

மருத்துவர்களின் கடும் எதிர்ப்பை மீறி தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் நேற்று நிறைவேற்றியது. இதனைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் நாளை ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால சிகிச்சையை தவிர புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும், மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் வகுப்புகளை புறக்கணிக்கும்படி இந்திய மருத்துவர்கள் அசோசியேஷன் கேட்டுக்கொண்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளனர்.
First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...