ஆபரேஷனின் போது கத்தரிகோலை உடலிலேயே வைத்து தைத்த மருத்துவர்கள்!

வயிற்று வலிக்கான காரணம் பற்றி அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றுக்குள் முக்கால் அடி நீளம் கொண்ட கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

news18
Updated: February 9, 2019, 11:40 AM IST
ஆபரேஷனின் போது கத்தரிகோலை உடலிலேயே வைத்து தைத்த மருத்துவர்கள்!
எக்ஸ்ரே படம்
news18
Updated: February 9, 2019, 11:40 AM IST
தெலுங்கானாவில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்த டாக்டர்கள், கத்தரிகோலை வயிற்றிலேயே வைத்து தைத்த சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் மங்கலஹாட் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி சவுத்ரி. 32 வயது மகேஸ்வரி சவுத்ரிக்கு ஹிரனியா நோய் பாதிப்பு இருந்தது.

தனக்கு ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (நிம்ஸ்)  மருத்துவமனைக்கு மகேஸ்வரி சென்றார்.


அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி அவருக்கு ஆபரேஷன் செய்த செய்தனர். ஆபரேஷன் முடிந்து உடல்நிலை தேறிய பின் வீடு திரும்பிய அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது.

எனவே வயிற்று வலிக்கான காரணம் பற்றி அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றுக்குள் முக்கால் அடி நீளம் கொண்ட கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

ஹிரனியா பாதிப்பை சரி செய்வதற்காக அவருடைய வயிற்றில் ஆபரேஷன் செய்த டாக்டர்கள் ஆபரேஷன் சமயத்தில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டது இதனால் உறுதியானது.

Loading...

டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான புகழ் கொண்ட இந்த மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவம் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also See...

First published: February 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...