தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

அவசரகால மருத்துவ சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

news18
Updated: July 31, 2019, 10:05 AM IST
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்!
மாதிரி படம்
news18
Updated: July 31, 2019, 10:05 AM IST
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தற்போதுள்ள இந்திய மருத்துவ கவுன்சிலை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில் தேர்வு, தேசிய நிறைவு நிலைத் தேர்வாக நடத்தப்படும் என்றும், இந்த தேர்வு மருத்துவ மேற்படிப்பிற்கு நுழைவுத் தேர்வாகவும், இளங்கலை மருத்துவம் முடித்து மருத்துவ சேவை மேற்கொள்வதற்கு உரிமம் பெறுவதற்கான தேர்வாகவும் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.


இதற்கு மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்தியாவில் மருத்துவமும், மருத்துவப் படிப்பும் மிக மோசமான பாதையை நோக்கிச் செல்லும் என்று இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

எனவே இதற்கு தெரிவித்து இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் அவசரகால மருத்துவ சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Loading...

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், இந்தியாவில் நவீன  மருத்துவ முறையை ஒழித்துவிட்டு பிற்போக்குத்தனமான மருத்துவ முறையை புகுத்த மத்திய அரசு முயல்வதாக குற்றம் சாட்டினார்.

Also see...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...