வெண்டிலேட்டர் தர மறுத்த மருத்துவர்! ஒன்றரை வயது குழந்தை பலியான சோகம்

அந்த மருத்துவமனையில் ஒன்றரை வயசு மதிக்கத்தக்க பெண் குழந்தை சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டது. சூடான நீர் கொட்டியதால், குழந்தையின் உடல் வெந்துபோயிருந்தது.

news18
Updated: February 12, 2019, 12:15 PM IST
வெண்டிலேட்டர் தர மறுத்த மருத்துவர்! ஒன்றரை வயது குழந்தை பலியான சோகம்
கோப்புப் படம்
news18
Updated: February 12, 2019, 12:15 PM IST
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், உங்கள் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் வெண்டிலேட்டர் கொண்டுவாருங்கள் என்று அலட்சியாகப் பேசிய மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்திலுள்ளது பன்டெல்காண்ட் அரசு மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் ஒன்றரை வயசு மதிக்கத்தக்க பெண் குழந்தை சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டது. சூடான நீர் கொட்டியதால், குழந்தையின் உடல் வெந்துபோயிருந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மருத்துவர் ஜோதி ராவுத்திடம் வெண்டிலேட்டர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த மருத்துவர் அலட்சியமாக, ‘உங்கள் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்றால், நீங்கள்தான் வெண்டிலேட்டர் ஏற்பாடு செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

வெண்டிலேட்டர் கிடைக்காத நிலையில், குழந்தை பலியானது. அவர்களுக்கு இடையிலான உரையாடல் வீடியோ இணையதளத்தில் வைரானது. வீடியோ வைரலானதத் தொடர்ந்து அலசியமாக பேசிய மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, உள்மட்ட அளவில் விசாரண நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய மருத்துவமனையின் டீன், ‘இந்த மருத்துவமனையில் 17 வெண்டிலேட்டர்கள் உள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...