ஹோம் /நியூஸ் /இந்தியா /

மருத்துவமனை விடுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..

மருத்துவமனை விடுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..

கோப்பு படம்

கோப்பு படம்

அந்த மருத்துவர் அவரை விடுதி அறைக்கு அழைத்து சென்று அங்கு அவருடன் பணியாற்றும் 2 மருத்துவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Lucknow, India

  உத்தரபிரதேசத்தில் மருத்துவமனை விடுதியில் வைத்து 3 மருத்துவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  லக்னோவில் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் பெண் ஒருவர் காவல்துறையிடம் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், பஸ்டி சதார் கோட்வாலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருடன் தனக்கு சமூகவலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் தன்னை மருத்துவமனைக்கு அழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

  இதையும் வாசிக்க: போலீஸ் வேசம் போட்டு மாமூல் வசூலித்த நபர்... கையும் களவுமாக சிக்கினார்

  இதனை நம்பி அந்த பெண்ணும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மருத்துவர் அவரை விடுதி அறைக்கு அழைத்து சென்று அங்கு அவருடன் பணியாற்றும் 2 மருத்துவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

  பஸ்டியில் இருந்து லக்னோ திரும்பியவுடன் செப்டம்பர் 27ஆம் தேதி அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் பெண்ணை அழைத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Crime News, Doctor, Gang rape, Uttar pradesh