மருத்துவரின் கவனக்குறைவால் சிறுமி ஒருவர் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளான சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ஈட்டா மாவட்டத்தில் ராணி அவந்தி பாய் லோதி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் கடந்த மாதம் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் அந்த சிறுமியை இரவோடு இரவாக பலவந்தமாக வெளியேற்றியுள்ளனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அங்கித் குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றை அளித்துளளார்கள். அதில், பலருக்கு போடப்பட்ட ஊசியை சிறுமிக்கும் மருத்துவர்கள் செலுத்தியிருப்பதாகவும், இதனால்தான் அவர் எச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளானதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
புகாரையடுத்து விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான குழு ஈட்டா அரசு மருத்துவமனையில் இது சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்த மத்திய பிரதேச முதல்வர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttar pradesh