கொரோனா குமார், கொரோனா குமாரி என பெயர்சூட்டிய மருத்துவர்..!

உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனா என்றும் ஆண் குழந்தைக்கு ஆண் குழந்தைக்கு 'லாக்டவுன்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனா என்றும் ஆண் குழந்தைக்கு ஆண் குழந்தைக்கு 'லாக்டவுன்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 • Share this:
  ஆந்திர மாநிலம் ஒய் எஸ் ஆர் கடப்பா மாவட்டம் வேம்பள்ளி என்ற இடத்தில் பிறந்த இரண்டு வெவ்வேறு குழந்தைகளுக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

  தாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சசிகலா, அபிரெட்டி கிராமத்தை சேர்ந்த ரமா தேவி ஆகிய கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிசேரியன் மூலம் இந்த குழந்தைகள் பிறந்தனர். இதில் சசிகலாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா குமார், என்றும் ரமா தேவிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா குமாரி என்றும் மருத்துவர் ஷேக் ஃபகீர் பாஷா சூட்டியுள்ளார். இந்த பெயர் சூட்டுதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

  ஏற்கனவே உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனா என்றும் ஆண் குழந்தைக்கு ஆண் குழந்தைக்கு 'லாக்டவுன்' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Also see...  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published: