முன்விரோதம்.. காரை மறித்து பட்டப்பகலில் சுட்டுக்கொல்லபட்ட டாக்டர் தம்பதியினர் .. வெளியான அதிர்ச்சி வீடியோ

ராஜஸ்தான்

மருத்துவரின் காரை பின் தொடர்ந்த இருவரும் அவர்களை சாலையில் வழிமறித்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

 • Share this:
  ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் காரில் சென்றுக்கொண்டிருந்த மருத்துவ தம்பதியினர் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலியானவர்கள் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி சீமா குப்தா என்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து மருத்துவ தம்பதியை சுட்டுக்கொன்ற நபர்களை போலீஸார் அடையாளம் கண்டனர்.

  காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட மருத்துவ தம்பதியின் குடும்பத்தினர் மீது 2019-ம் ஆண்டு கொலை வழக்கு பதிவானது தெரியவந்துள்ளது. மருத்துவரான சுதீப் குப்தாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் மனைவியும் அவரது அம்மாவும் அந்த பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்தப்பெண்ணும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.

  Also Read: புல்வாமா தாக்குதலில் கணவர் வீரமரணம்.. கணவரின் தடத்தை பின்பற்றி ராணுவத்தில் இணைந்த மனைவி

  இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மருத்துவர் மற்றும் அவரது மனைவி, தாய் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி இவர்கள் சிறையில் அடைகப்பட்டனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் மூவரும் பிணையில் வெளி வந்துள்ளனர். மருத்துவரின் குடும்பத்தால் கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரனும் அவரது உறவினரும் மருத்துவரையும் அவரது மனைவியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். மருத்துவரின் காரை பின் தொடர்ந்த இருவரும் அவர்களை சாலையில் வழிமறித்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

  இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மருத்துவரின் காரை வழிமறித்து தங்களது வாகனத்தை நிறுத்துகின்றனர். இருசக்கர வாகனத்தின் அருகே ஒருவர் நிற்க மற்றொருவர் மருத்துவரின் காரை நோக்கி நடந்து செல்கிறார். மருத்துவரிடம் பேச்சுக்கொடுத்தபடி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்கிறார். மற்றொரு நபர் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய துப்பாக்கியால் இருவரையும் சுட்டுக்கொலை செய்த நபர் மிகவும் சாதாரணமாக வந்து பைக்கில் ஏறுகிறார்” இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருத்துவ தம்பதியை சுட்டுக்கொன்ற அனுஷ் மற்றும் மகேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். ராஜஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சிதா கோலியின் கார் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த சில தினங்களில் மருத்துவ தம்பதி பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா குற்றஞ்சாட்டியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: