ஹோம் /நியூஸ் /இந்தியா /

கலெக்டரே... மது அருந்துவீர்களா? சர்ச்சை கேள்வி கேட்டு சிக்கிய அமைச்சர்!

கலெக்டரே... மது அருந்துவீர்களா? சர்ச்சை கேள்வி கேட்டு சிக்கிய அமைச்சர்!

மகாராஷ்டிரா அமைச்சரின் வைரல் வீடியோ

மகாராஷ்டிரா அமைச்சரின் வைரல் வீடியோ

மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர் ஆய்வு கூட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடம் போது நீங்கள் மது அருந்துவீர்களா என கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Maharashtra, India

  மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். இவர் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ ஆவார். தற்போது அம்மாநிலத்தில் கனமழை பாதிப்பு காரணமாக விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளது.

  இந்நிலையில், மத்திய மகாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் அப்துல் சத்தார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆய்வுக்குப் பின் அப்பகுதி எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள், நிர்வாகிகளுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவருக்கும் டீ பரிமாறப்பட்ட நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ராதா பினோத் சர்மா தனக்கு டீ வேண்டாம் என்றும் டீ அதிகம் குடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த ஃபயர் கட்.. சொந்த காசில் தலைக்கு தீவைத்துக்கொண்டு இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

  அதை கவனித்த அமைச்சர் அப்துல் சத்தார், நீங்கள் மது குடிப்பீர்களா என ஜாலியாக கேட்டார். இதை கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இந்த பேச்சை ரெக்கார்ட் செய்ய வேண்டாம் என அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், இந்த நிகழ்வை அருகே இருந்த நபர் பதிவு செய்ய அது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் சாவந்த், "அமைச்சர் வெள்ள பாதிப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய சென்றாரா அல்லது மது நிலவரத்தை ஆய்வு செய்ய சென்றாரா" என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Maharastra, Viral Video