Home /News /national /

பிரதமரின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது... அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ராகுல் காந்தி பதில்

பிரதமரின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது... அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ராகுல் காந்தி பதில்

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ராகுல் காந்தி பதில்

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ராகுல் காந்தி பதில்

எங்களை அச்சுறுத்த என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் மணிக்கணக்கில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை நேற்று மாலை சீல் வைத்தது.

    அமலாக்கத்துறையின் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என்பதால், சீல் வைக்கும் நடவடிக்கைக்கு முன்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் சோனியா இல்லம் அமைந்துள்ள ஜன்பத் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதி முழுவதும் நேற்று மாலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஜெய்ராம் ரமேஷ், அஜய் மாக்கன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கர்கே இந்த விவகாரத்தை இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் எழுப்பினர். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து நேற்று இரவே அவசர அவசரமாக டெல்லி திரும்பினார். இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அவர், இந்த நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நிதி முறைகேடு புகார் : கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன்

    இது குறித்து அவர், "நேஷனல் ஹெரால்டு குறித்து சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளுமே எங்களை அச்சுறுத்தி பார்க்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் எங்களை முடக்கி பேச விடாமல் தடுத்து விடலாம் என பிரதமர் மோடியும் அமித் ஷாவும் நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் பலிக்காது. நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் அதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


    முன்னதாக விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகிய விவகாரங்களை எழுப்பி டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியவற்றை நோக்கி பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தங்களை தடுத்து திசை திருப்பும் நோக்கில் தான் இது போன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மூலம் மத்திய பாஜக செய்வதாக காங்கிரஸ் புகார் தெரிவித்து வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Congress, Enforcement Directorate, National herald, Rahul gandhi

    அடுத்த செய்தி