மத்திய அமைச்சரை கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் உண்டா?

கோப்பு படம்

நாடாளுமன்றம் கூடும் நாளில் இருந்து 40 நாட்களுக்கு முன்போ, அல்லது கூடிய பின் 40 நாட்களிலோ கைது செய்ய முடியாது.

 • Share this:
  மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை அறைந்திருப்பேன் என கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ராணே-வை மகாராஷ்டிர போலீஸ் கைது செய்த நிலையில் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். மத்திய அமைச்சரை கைது செய்ய பல விதிமுறைகள் உள்ளன.

  நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவில்லை என்றால் ஒரு மத்திய அமைச்சரை கைது செய்ய முடியும். அதிலும் கிரிமினல் வழக்கு பதியப்பட்டால் மட்டுமே கைது செய்யலாம். அதேநேரம், கைதுக்கான காரணத்தை காவலர்களோ, நீதிபதியோ மாநிலங்களவைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும்.

  Also Read : டி.ஆர்.பாலு, முரசொலி மாறனை தொடர்ந்து மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்ட 3-வது மத்திய அமைச்சர் நாராயண் ரானே

  அவை நடந்து கொண்டிருந்தால் கைது தொடர்பாக அவையின் தலைவர் அவையில் தெரிவிப்பார். அவை நடக்காத பட்சத்தில் எம்.பி.க்களுக்கான அறிவிக்கையில் கைது பற்றிய தகவல் வெளியாகும். சிவில் வழக்குகளில் மத்திய அமைச்சர்களை கைது செய்ய கட்டுப்பாடு உள்ளது. நாடாளுமன்றம் கூடும் நாளில் இருந்து 40 நாட்களுக்கு முன்போ, அல்லது கூடிய பின் 40 நாட்களிலோ கைது செய்ய முடியாது.  கிரிமினல் வழக்கு மற்றும் தடுப்புக் காவல் ஆகியவைக்கு இந்த விதி பொருந்தாது. மத்திய அமைச்சர் நாராயண் ராணேயை முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்ததாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் அது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: